சென்னையில் மாஞ்சா நூலுக்கு தடை நீடிப்பு- போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னையில் மாஞ்சா நூலுக்கான தடை வருகிற நவம்பர் மாதம் 13-ந்தேதி வரை 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்
Published on

சென்னை:

மாஞ்சா நூலை பயன்படுத்தி விடப்படும் பட்டத்தால் உயிரிழப்பு, காயம் ஏற்படுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை அமலில் உள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மாஞ்சா நூலுக்கான தடை வருகிற நவம்பர் மாதம் 13-ந்தேதி வரை 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பிறப்பித்தார். மாஞ்சா நூலுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com