மணிப்பூரில் பாலம் இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த லாரி

மணிப்பூரில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்ததால் ஒரு லாரி ஆற்றில் விழுந்தது.
பாலம் உடைந்ததால் ஆற்றில் விழுந்த லாரி
பாலம் உடைந்ததால் ஆற்றில் விழுந்த லாரி
Published on

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் தமெங்லாங் மாவட்டம், தாவோபாம் கிராமத்தில் உள்ள இரங் ஆற்றுப் பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. தேசிய நெடுஞ்சாலை 37-இல் இம்பால்-ஜிரிபம் சாலையை இணைக்கும் இந்த பாலம் இடிந்ததால் அந்த பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி ஆற்றில் விழுந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர், ஆற்றில் விழுந்த லாரியில் சிக்கியிருந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com