மங்களமேடு அருகே தீக்குளித்த மூதாட்டி பலி

மங்களமேடு அருகே தீக்குளித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி பலி
மூதாட்டி பலி
Published on

மங்களமேடு:

மங்களமேடு அருகே உள்ள கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மாள்(வயது 70). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆன நிலையில், சின்னம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சின்னம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மூதாட்டி நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சின்னம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com