மங்கலம் நால்ரோடு பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த பொதுமக்கள்

மங்கலம் நால்ரோடு பகுதியில் குண்டும் குழியுமான சாலையை பொதுமக்கள் சீரமைத்தனர்.
குண்டும் குழியுமான சாலை பொதுமக்களால் சீரமைப்பதற்கு முன்பு எடுத்த படம்.
குண்டும் குழியுமான சாலை பொதுமக்களால் சீரமைப்பதற்கு முன்பு எடுத்த படம்.
Published on

மங்கலம்:

மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் பள்ளிவாசல் அருகே தார்சாலையானது குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்று வந்தனர். மேலும் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால், குண்டும் குழியுமான தார்சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.

இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பின்னர் மங்கலம் நால்ரோடு பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் மங்கலம் நால்ரோடு பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் “குண்டும் குழியுமான தார்சாலையை தற்காலிகமாக நாங்களே சீரமைத்துக் கொள்கிறோம்”என தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து மங்கலம் நால்ரோடு பகுதி பொதுமக்கள் “குண்டும் குழியுமான தார்சாலையில் செம்மண்கொட்டி தற்காலிகமாக, குண்டும் குழியுமான தார்சாலையை சீரமைத்தனர். மேலும் மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைத்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com