

மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.
வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார்.
இதன் காரணமாகவே மேனகா காந்தி தான் பலமுறை வெற்றி பெற்ற பிலிபிட் தொகுதியை வருணுக்கு விட்டு கொடுக்கிறார்.
அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.