மந்தைவெளியில் கார் டிரைவர் வெட்டிக் கொலை

மந்தைவெளியில் கார் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder
மந்தைவெளியில் கார் டிரைவர் வெட்டிக் கொலை
Published on

சென்னை:

சென்னை தேனாம்பேட்டை ராஜநாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் சிவா (28). கார் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. பெற்றோருடன் வசித்து வந்தார்.

நேற்று இவருக்கு பிறந்த நாளாகும். இரவு 11.15 மணியளவில் பட்டினம்பாக்கம் சவுத் சேனல் பேங்க் ரோட்டில் தனியாக நடந்து சென்றார்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் சிவாவை சூழ்ந்து கொண்டு சராமாரியாக வெட்டியது. அவர் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது.

உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பிணமானார்.

இதுபற்றி பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடந்தது.

சிவா தனியாக செல்வதை நோட்டமிட்டு வந்து கொலை வெறித் தாக்குதலில் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிவாவிற்கு யாருடன் எல்லாம் தொடர்பு இருந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com