மணவாளநகரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

மணவாளநகரில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் திருவள்ளூர்-சென்னை சாலையில் நேற்று நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் டயர் பஞ்ச்சர் போடும் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்து இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை எடுத்தது.

பின்னர் அருகிலுள்ள செருப்புக் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 17ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் விலை உயர்ந்த செருப்புக்களை கொள்ளையடித்தனர்.

அதன் பின்னர் பேன்சி ஸ்டோர் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் ‌ஷட்டரின் பூட்டை உடைக்க முடியாததால் அடுத்துள்ள மளிகைகடையின் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த மணவாளநகர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெரியகுப்பம் பகுதியிலிருந்து ஆட்டோவை திருடிக்கொண்டு அங்கு வந்த மர்ம நபர்கள் இந்தகொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தகொள்ளைச் சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக்கொண்டு மணவளநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com