மணப்பாறை அருகே என்ஜின் கோளாறால் நள்ளிரவில் நடுவழியில் நின்ற ரெயில்

மணப்பாறை அருகே என்ஜின் கோளாறால் நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சி:

ஜபல்பூர்நகரில் இருந்து திருச்சி வழியாக நெல்லை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு திருச்சி ஜங்சனுக்கு வந்தது. பிறகு மீண்டும் நெல்லையை நோக்கி புறப்பட்டது.

இரவு 1 மணிக்கு ரெயில் மணப்பாறை அருகே சென்ற போது திடீரென ரெயில் என்ஜினீல் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவரால் ரெயிலை இயக்க முடியவில்லை. இதனால் ரெயில் நடுவழியில் நின்றது. இது குறித்து திருச்சி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பழுதான என்ஜினுக்கு பதில் மாற்று என்ஜின் திருச்சியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

அதன் பிறகு புதிய என்ஜின் பொருத்தப்பட்டு நெல்லைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. என்ஜின் பழுதால் பயணிகள் நள்ளிரவில் நடுவழியில் தவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com