மானாமதுரையில் இன்று மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் மரணம்

மானாமதுரையில் இன்று காலை வயரில் இரும்பு கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து போலீஸ்காரர் பலியானார்.
மானாமதுரையில் இன்று மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் மரணம்
Published on

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர், நெடுஞ்சாலை வாகன ரோந்து காவலராக பணிபுரிந்தார்.

நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜீவா, இன்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். வீட்டு முன்பு கிடந்த நீளமான இரும்பு கம்பியை அப்புறப் படுத்துவதற்காக எடுத்தார்.

அப்போது வீட்டின் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியது. இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஜீவா மீது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான ஜீவாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com