திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம்

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வாலிபர் மரணம்
திருப்பூர் வாலிபர் மரணம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தார்.  மணிகண்டனின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com