கேரளா முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கேரளா முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கன்னூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜனை நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்மநபர் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் போன் செய்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் கன்னூர் மாவட்டம் பாயன்னூர் பகுதியைச் சேர்ந்த விஜேஷ் குமார் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், போலீசார் விஜேஷ் குமாரை இன்று கைது செய்தனர். விஜேய் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு முன் இது போன்று பல முறை தனது தாய் மற்றும் சகோதரியின் போனிலிருந்து தெரியாத நபர்களுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். மேலும், விஜேசை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #keralacm #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com