சிஏஏ-க்கு எதிராக ஜாமியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

டெல்லியில் சிஏஏ-க்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்
Published on

புதுடெல்லி:

புதுடெல்லி உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகப் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. 

இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு குடிரியுரிமை திருத்த்ச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக கடந்த சில போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜாமியாவில் இன்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் அலறிடித்துக்கொண்டு ஒடினர். அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சிஏஏ போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் டெல்லி ஜாமியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com