காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மதுரையில் காவல்துறை விசாரணைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

மதுரை:

மதுரை தவிட்டு சந்தை பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவர் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்தார். இவர் தெற்கு மாசி வீதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவிற்கு நேற்று  மாலை சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அழகர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் அவரின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியைடைந்து காவல்நிலையத்தில் குவிந்தனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும். விசாரணைக்கு சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com