விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மனைவியை கொன்ற வாலிபர் கைது

டெல்லியில் விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்
Published on

புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜலீல் ஷேக்(27) என்பவர் தனது முதல் மனைவியை பிரிந்து கடந்த 2014-ம் ஆண்டு பாத்திமா சர்தார்(27) என்ற பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

திருமணமான தம்பதிகள் மேற்கு வங்காளத்தில் இருந்த கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். டெல்லியில் உள்ள சாகர்பூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இதற்கிடையில், ஜலீல் ஷேக் தனது மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பாத்திமா சர்தார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜலீல் தனது மனைவியை கடந்த 5-ம் தேதி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாகர்பூரில் உள்ள சமூக கூடம் அருகே வீசி விட்டு தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த உடலை ஆகஸ்ட் 6-ம் தேதி கைப்பற்றிய போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என அடையாளம் காண்பதற்காக ஊடகங்களில் விளம்பரம் செய்தனர். 

ஊடகங்களில்  வெளியான விளம்பரத்தை கடந்த 17-ம் தேதி பார்த்த பாத்திமா சர்தாரின் உறவினர் ஒருவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட பாத்திமாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பாத்திமா சர்தாரை கொலை செய்த அவரது கணவரை போலீசார் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மேற்கு வங்காளத்தில் கைது செய்துள்ளனர். 

தனது இரு சக்கர வாகனத்தை விற்பதற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த ஜலீல் ஷேக்கை சுற்றி வளத்தை டெல்லி போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com