

போபால்:
குஜராத் மாநிலத்தில் பதிதார் இனத்துக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் படேல். இவர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார்.
ஹர்திக் படேல் செய்தியாளர்களை சந்தித்தபோது, அங்கிருந்த ஆசாமி அவர் மீது மை வீசினார். இதையடுத்து அங்கு சுற்றியிருந்த ஹர்திக் ஆதரவாளர்கள் மை வீசிய ஆசாமியை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவரது பெயர் மிலிந்த் குர்ஜார் என்பதும், படேல் மற்றும் குர்ஜார் சமூகத்தினருக்கு எதிராக செயல்பட்டு வருவதால் ஹர்திக் மீது மை வீசியதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews