சென்னை தனியார் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பெண் ஊழியர் மீது ஆசிட் ஊற்றி தீ வைப்பு

சென்னையில் பெண் ஊழியர் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்த தனியார் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். #acidattack
சென்னை தனியார் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பெண் ஊழியர் மீது ஆசிட் ஊற்றி தீ வைப்பு
Published on

சென்னை:

சென்னை மடிப்பாக்கம் வாணுவம்பேட்டையில் ராஜா என்பவருக்கு சொந்தமான தனியார் ரத்த பரிசோதனை நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் யமுனா என்ற பெண் பணியாற்றி வந்தார்.

இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த யமுனாவிற்கு அந்நிலைய உரிமையாளர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #acidattack #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com