4 வயது சிறுமி கற்பழிப்பு - மகாராஷ்டிரா வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

பால்கர்:

மகாராஷ்டிராவின் வசாய் பகுதியை சேர்ந்தவர் குப்தா. இவர் கடந்த 2017 ஆண்டு ஜூன் 23-ம் தேதி, அப்பகுதியில் உள்ள ஒரு 4 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து கடத்தி சிறுமியை கற்பழித்துள்ளார். சிறுமியின் பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்ற சமயத்தில் சிறுமியை கடத்தியிருந்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குப்தா கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அவர் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து குற்றவாளியான குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்ட உதவி மையம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com