ஜிலேபியில் கலப்படம் செய்தவருக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜிலேபியில் கலப்படம் செய்த வழக்கில் நீதிமன்றம் 22 ஆண்டுகள் தாமதமாக தண்டனை வழங்கியுள்ளது.
ஜிலேபியில் கலப்படம் செய்தவருக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ராம் கோபால் என்பவரின் கடையில் 22 ஆண்டுகளுக்கு முன் ஜிலேபியில் ரசாயன பொருள் கலக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த ரசாயனம் உயிருக்கு கேடுவிளைக்கும். அதனால், ஜிலேபி மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஜிலேபியில் ரசாயனம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு 1 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்தால் மேலும் 15 நாட்கள் தண்டனை வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 1995-ம் ஆண்டில் செய்யப்பட்ட குற்றத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com