திருச்சி: தலைமலை கோவிலில் கிரிவலம் சென்றுபோது தவறி விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல்

திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் 4500 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருச்சி: தலைமலை கோவிலில் கிரிவலம் சென்றுபோது தவறி விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் தா. பேட்டை நீலியாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தலைமலை. இந்த தலைமலை சுமார் 4500 அடி உயரம் கொண்டதாகும்.

இந்த மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும். 4500 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உள்ள சுவரை பிடித்து கொண்டு பக்தர்கள் கிரிவலம் வருவர்.

நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர். நேற்று கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 4500 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எனினும் அந்த இளைஞர் குறித்து அவரது குடும்பத்தார் யாரும் புகார் அளிக்காததால் அவரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com