சினிமா தியேட்டரில் வாலிபரை பார்த்து கவர்ச்சி பார்வை - மனைவியின் தலையை துண்டாக்கிய கணவர்

சினிமா தியேட்டரில் அருகே இருந்த வாலிபரை பார்த்து கவர்ச்சியாக பார்த்த சந்தேகத்தில் மனைவியின் தலையை சுத்தியால் அடித்தும், அரிவாளால் துண்டாக்கியதால் கணவர் கைது செய்யப்பட்டார்.
சினிமா தியேட்டரில் வாலிபரை பார்த்து கவர்ச்சி பார்வை - மனைவியின் தலையை துண்டாக்கிய கணவர்
Published on

கொழிஞ்சாம்பாறை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவரது மனைவி காளியம்மாள் (45). இவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் முக்கோலைகால் என்ற இடத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

சம்பவத்தன்று இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சாமி-2 படம் பார்க்க சென்றனர். படம் பார்த்தபோது காளியம்மாள் அங்கிருந்த வாலிபரை பார்த்து சிரித்தாகவும், கவர்ச்சி பார்வை பார்த்ததாகவும் மாரியப்பன் நினைத்தார். ஆனால் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் படம் பார்த்தார்.

சினிமா முடிந்த பின்னர் இருவரும் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்தபோது சிரிப்பு, கவர்ச்சி பார்வை குறித்து கேட்டார். அப்போது காளியம்மாள் மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி ஓங்கி 4 முறை அடித்தார்.

இதில் காளியம்மாள் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தலை பிளந்து ரத்தம் வழிந்தபின்னரும் ஆத்திரம் தீராத மாரியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து உயிருக்கு போராடிய மனைவியின் கழுத்தை வெட்டி துண்டாக்கினார். பின்னர் சுத்தியல் மற்றும் அரிவாளை நன்றாக கழுவி விட்டு மேஜை மீது வைத்தார்.

அதன் பின்னர் குளித்து விட்டு புதிய ஆடை அணிந்து கொண்டு எதுவும் நடக்காதது போல் திருவனந்தபுரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர் கோவில் வழியாக சென்றுவிட்டார்.

இது குறித்து திருவனந்தபுரம் பேரூர்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன்னை தேடி வந்தனர். இந்நிலையில் நெல்லையில் வைத்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com