பீகார்: தாய் இல்லாமல் வளர்க்க முடியாததால், மூன்று குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

பீகார் மாநிலத்தில் தாய் இல்லாததால் 3 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட நபர், அந்த குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார்: தாய் இல்லாமல் வளர்க்க முடியாததால், மூன்று குழந்தைகளுடன் தந்தை தற்கொலை
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள மிகிபார் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனிருத் பண்டிட். இவரது மனைவி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால், மூன்று குழந்தைகளையும் தனி ஆளாக அனிருத் வளர்த்து வந்தார்.

குழந்தைகள் மூவரும் வளர வளர அனிருத் கடும் சிரமம் அடைந்துள்ளார். இதனால், கடும் மன அழுத்தத்தில் இருந்த அனிருத் நேற்று மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com