கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் மரணம்

ஐதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 23 வயது வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் மரணம்
Published on

ஐதராபாத்:

ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நேற்று இரவு உள்ளூரைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு அணியைச் சேர்ந்த வாலிபர் லாயிட் அந்தோணி(வயது 23), பந்துவீச ஓடிவரும்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த அந்தோணி கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். 

பந்து வீச ஓடிவரும்போது அந்தோணி மயங்கி விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com