நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் பேசியதால் அடித்துக்கொன்ற வாலிபர்

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட பெண் வேறு ஒருவருடன் போனில் பேசியதை கேட்ட வாலிபர் கோபத்தில் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen
நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் பேசியதால் அடித்துக்கொன்ற வாலிபர்
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார். அப்போது நிஷா போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். யாருடன் பேசி கொண்டிருந்தாய்? என கேட்டதற்கு நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ் போனை கேட்டதற்கு அவர் தர மறுத்தார்.

இதையடுத்து, ஹரிஷ் கோபத்தில் நிஷாவை பயங்கரமாக தாக்கினார். அதனை தடுக்க வந்த நிஷாவின் தாயாரையும் ஹரிஷ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிஷா உடலில் ஏற்பட்ட உள் காயங்களினால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்தினால் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #rajasthanwomen

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com