டெல்லி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கண்முன்னே வாலிபர் அடித்துக் கொலை

வடக்கு டெல்லியில் உள்ள சப்சி மண்டி ரெயில் நிலையத்தில் வாலிபர் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கண்முன்னே வாலிபர் அடித்துக் கொலை
Published on

புதுடெல்லி:

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ரவி என்பவர் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ராகுல் என்பவரிடம் இரண்டு மாதத்திற்கு முன் கடனாக 1500 ரூபாயை பெற்றுள்ளார். அதனை திருப்பி கொடுக்காததால் நேற்று சப்ஜி மண்டி ரயில் நிலையத்தில் வைத்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ராகுல் தனது நண்பர்களான லலித் மற்றும் ராஜேந்தருடன் சேர்ந்து ரவியை தாக்கியுள்ளார். இதில் ரவி படுகாயமடைந்தார்.

இது குறித்து போலீஸ் கூறுகையில், ‘இச்சம்பவம் அனைத்தும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்துள்ளது. ஆனால் யாரும் அதனை தடுக்கவில்லை. போலீஸ் வந்த பிறகே அவர்கள் விட்டுச் சென்றனர். ரவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தனர்.

கடன் தொகையை திருப்பி தராததால் பொதுமக்கள் கண்முன்னே வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com