வேலூரில் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை சூறையாடியவர் கைது

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை சூறையாடியவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on


வேலூர்:

வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவதர் ராகுல் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டுள்ளார். 

அதற்கு பணம் கொடுத்தால்தான் மதுபாட்டில் கிடைக்கும் என்று விற்பனையாளர் பலராமன் கூறியுள்ளார். 

அதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து இரும்பு ராடால் அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து உடைத்து சூறையாடினார்.

இது குறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் விற்பனையாளர் பலராமன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். 

ராகுல் மீது வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com