காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

சின்ன தாராபுரம் அருகே மலைச்சியூர் காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கரூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சின்ன தாராபுரம் அருகே மலைச்சியூர் காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சின்னதாராபுரம் வடக்கு ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது53) என்பவர் விற்பனைக்காக 25 மது பாட்டில்களை பதிக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  

அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com