ஜெர்மனி: சாலையில் சென்றவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்கிய நபர் கைது

ஜெர்மனி நாட்டில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
ஜெர்மனி: சாலையில் சென்றவர்கள் மீது கத்தியால் குத்தி தாக்கிய நபர் கைது
Published on

பெர்லின்:

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள முக்கிய பகுதியான ரோசென்ஹைமெர் ப்ளாட்ஸ்-ல் இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு சைக்கிளில் வந்த 40 வயது மிக்க நபர் ஒருவர், திடீரென தான் கொண்டு வந்த கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

இதனால், அங்கு பெரும் பதற்றம் மற்றும் கூச்சல் நிலவியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். எனினும், அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது விசாரணைக்கு பின்னர் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் ஒரு பெண் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com