குடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் திரிசூலத்தால் குத்திக் கொலை

உத்தர பிரதேச மாநிலத்தில் குடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் திரிசூலத்தால் குத்திக் கொலை
Published on

லக்னோ:

உத்தர  பிரதேச மாநிலம் அயூரய்யா மாவட்டம், ராம்பூர் அட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கியான் சிங் என்ற பிங்கு. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். மனைவி மற்றும் தாயாரை அடித்து உதைத்துள்ளார்.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து வந்த உறவினர் துளசி ராம் (45), அவர்களை சமாதானம் செய்துவைத்தார்.

சண்டை ஓய்ந்ததும் தன் வீட்டிற்குச் சென்ற துளசி ராம், சாப்பிடத் தொடங்கினார்.

அப்போது ஆத்திரத்துடன் அங்கு வந்த பிங்கு, தான் கொண்டு வந்த திரிசூலத்தினால் துளசி ராமை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த துளசிராம் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து துளசி ராமின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பிங்குவைத் தேடி வருகின்றனர். பிங்குவின் தாய் மற்றும் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப சண்டையில்  தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com