மால்களில் இனி வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது -குஜராத் உயர்நீதிமன்றம்

மால்கள் போன்ற பெரிய வணிக வளாகங்களில் இனி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வணிக வளாகங்களில் வாகனங்கள் பார்க்கிங்
வணிக வளாகங்களில் வாகனங்கள் பார்க்கிங்
Published on

குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மால்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.30 என அன்றாடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மாநில அரசின் பார்க்கிங் விதிகளுக்கு உட்பட்டே வசூலிக்கப்படுவதாக வணிக வளாகங்கள் தெரிவித்தன.

இந்த கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் வணிக வளாகங்களுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து வணிக நிறுவனங்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, வாகன கட்டணம் குறைவாக வசூலிக்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு மனு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆனந்த் தேவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com