பேரணாம்பட்டு அருகே மலையடிவாரத்தில் ஆண் பிணம்

பேரணாம்பட்டு அருகே மலையடிவாரத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண் பிணம்
ஆண் பிணம்
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு அடுத்த கிருஷ்ணம் பள்ளி சொக்க ரிஷி குப்பம் மலையடிவாரத்தில் முகம் சிதைந்த நிலையில் சுமார், 35 வயது மதிக்கதக்க வாலிபர் பிணம் கிடந்தது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லில்லி சாந்தி மேல்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து வாலிபர் பிணத்தை பார்வையிட்டனர்.

அப்போது வாலிபர் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. இறந்து கிடந்தவர் நீலநிற லுங்கியும், டி-சர்ட் அணிந்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் யாராவது வாலிபரை கொலை செய்து வீசி சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிணம் அழுகிய நிலையில் உள்ளதால் டாக்டர் குழுவினர் சம்பவ இடத்திலேயே இன்று பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com