நெருக்கடி நிலையை நீட்டிக்க வேண்டும் - பாராளுமன்றத்திடம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்

மாலத்தீவில் 15 நாட்களுக்கு பிரகடனம் செய்யப்பட்ட அவசர நிலை இன்றுடன் முடியும் நிலையில், அதனை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் அப்துல்லா யாமீன் ஒப்புதல் கேட்டுள்ளார். #Maldives
நெருக்கடி நிலையை நீட்டிக்க வேண்டும் - பாராளுமன்றத்திடம் கேட்கிறார் மாலத்தீவு அதிபர்
Published on

மாலே:

மாலத்தீவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது, சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார்.

இதனால், அவரை பதவி நீக்கும் நடவடிக்கையில் தலைமை நீதிபதி இறங்கினார். இதனை அடுத்து, கடந்த 5-ம் தேதி மாலத்தீவில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இன்று இரவுடன் அவசர நிலைக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், அதனை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை அந்த மசோதாவின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 15 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என முன்னர் பிறப்பித்த உத்தரவையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். #Maldives #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com