

நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.
இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.