

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் அனாதை இல்லங்களிலும் உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் படி அனைத்து மாவட்டங்களில் உள்ள எஸ்.எஸ்.பி. மற்றும் எஸ்.பி. அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. அலுவலத்தில் இருந்து அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், போலீஸ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.
நாடு முழுவதும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால், முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ளவர்கள் இது போன்ற பண்டிகையை கொண்டாட முடியவில்லை. அதனால் அக்டோபர் 18-ம் தேதி அவர்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என டி.ஜி.பி.சுல்கான் சிங் தெரிவித்தார். அவர்களுக்கு இனிப்பு, விளக்கு மற்றும் பழங்கள் வழங்க வேண்டும் . மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் அவை வழங்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.