டெல்லி தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் மைத்ரேயன் எம்.பி. தர்ணா

டெல்லி தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் காரை அனுமதிக்காததால் எம்.பி. மைத்ரேயன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்தில் மைத்ரேயன் எம்.பி. தர்ணா
Published on

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி (ஓ.பி.எஸ்.)யைச் சேர்ந்த டெல்லி மேல்-சபை எம்.பி. மைத்ரேயன் இன்று காலை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு காரில் சென்றார்.

இரட்டை இலையை மீட்பதற்காக கட்சி உறுப்பினர்களின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்காக அவர் சென்றார்.

ஆனால் அவரது காரை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com