கள்ளக்காதல் தகராறில் மேஸ்திரி கொன்று புதைப்பு: மாமனார் நண்பர் கைது

கள்ளக்காதல் தகராறில் மேஸ்திரி கொன்று புதைப்பு: மாமனார் நண்பர் கைது

கள்ளக்காதல் தகராறில் மேஸ்திரியை கொன்று பொன்னை ஆற்றில் புதைத்த மாமனாரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
Published on

வேலூர்:

காட்பாடி தாலுகா லத்தேரி அடுத்த கீழ்ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் லத்தேரி கிராமம் சிங்கா ரெட்டியூர் பகுதியை சேர்ந்த சுந்தேரசன் மகள் குப்புவுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, கார்த்தி(10), திவாகர்(9) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

பழனியின் மாமனார் சுந்தேரேசனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். 4வது மனைவி காசியம்மாள் மகளை தான் பழனி திருமணம் செய்து கொண்டார். மாமானார் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பழனி, மாமியார் காசியம்மாள் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையறிந்த, பழனியின் மனைவி குப்பு தனது தாய்வுடனான கள்ள தொடர்பை கைவிடும்மாறு தெரிவித்துள்ளார். ஆனால், பழனி மனைவியின் பேச்சை கண்டுகொள்ள வில்லை.

இதையடுத்து, இந்த கள்ள தொடர்பு விவகாரம் மாமனார் சுந்தரேசனுக்கு தெரியவந்தது. பழனியை அழைத்து கண்டித்ததுடன், தனது மனைவி உடன் இருக்கும் கள்ள தொடர்பை கைவிடும்மாறு கூறினார்.

ஆனால், பழனி கள்ள தொடர்பை கைவிட மறுத்தார். மருமகனும், மாமியாரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனால் பழனியின் மனைவி குப்பு கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தங்கி இருந்தார்.

அப்போது, சுந்தரேசன் வீட்டிற்கு அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் சேகர் வந்து சென்று உளளார்.

சேகருக்கும், குப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக பழனி சந்தேகமடைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி, மாமானார் வீட்டிற்கு வந்த பழனி, மனைவி குப்பை அழைத்து கண்டித்து உள்ளார்.

இதைபார்த்த மாமனார் சுந்தரேசன் இதுகுறித்து, சேகரை அழைத்து விசாரிக்கலாம் என்று கூறி வெளியே அழைத்து சென்றார்.

பின்னர், சேகரை அழைத்துக் கொண்டு 3 பேரும் சேர்ந்து பொன்னை, அணைக்கட்டு பகுதியில் உள்ள ஆற்று பகுதிக்கு வந்தனர். அங்கு 3 பேரும் சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கு ஏறிய உடன், பழனி தனது மனைவியுடன் உள்ள கள்ள தொடர்பை கைவிட கூறி சேகரிடம் வாக்கு வாதம் செய்தார். அதற்கு சேகர் உனது மனைவிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்து உள்ளார். அதை ஏற்காத பழனி, மாமனார் சுந்தரேசன், சேகரை கடுமையான வார்த்தையில் திட்டினார்.

அப்போது மாமனார் சுந்தேரசன் முதலில் எனது மனைவி உடனான கள்ள தொடர்பு துண்டிக்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். வாய்வார்த்தை முற்றி 3 பேரும் கை கலப்பில் இறங்கினர். சுந்தரேசனும், சேகரும் சேர்ந்து பழனியை கடுமையாக தாக்கினர். இதில் நிலை குலைந்த பழனி மயங்கி கீழே விழுந்தார்.

ஆத்திரம் அடங்காத சுந்தரேசனும், சேகரும் ஆற்று பகுதியில் கிடந்த ஒரு கயிற்றை எடுத்து பழனியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பழனி இறந்ததை உறுதி செய்த பின்னர் அவரது பிணத்தை பொன்னையாற்று பகுதியில் புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல், சுந்தேரேசனும், சேகரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

மகன் வீடு திரும்பாததை அறிந்த பழனியின் தாய் இதுகுறித்து, லத்தேரி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகன் அவரது மாமனாருடன் தான் சென்றார், அதன் பின் வீடு திரும்பவில்லை, எனவே அவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து சுந்தரேசன், சேகரை கண்காணித்து வந்த போலீசார் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, நேற்று பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ள தொடர்பு விவகாரத்தில் பழனி கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து லத்தேரி இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், பொன்னை இன்ஸ்பெக்டர் அப்பாசாமி ஆகியோர் சுந்தரேசன், சேகரை கைது செய்தனர்.

பழனியை கொன்று புதைத்த இடத்தை அவர்கள் அடையயாளம் காட்டினர். தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமையில் பொன்னை ஆற்று பகுதியில் உள்ள பிணத்தை தோண்டி எடுத்தனர். அங்கு கிடைத்த எழும்புகளை டாக்டர்கள் கலைச்செல்வி, நாகேந்திரகுமார் சேகரித்து அய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து, போலீசார் மேலும், விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com