மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பலி

கம்பைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலத்த காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்து
விபத்து
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத் துள்ள நல்லகுட்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது35). டைல்ஸ் ஒட்டும் கட்டிட மேஸ்திரி.

இந்த நிலையில் நேற்று கம்பைநல்லூரில் இருந்து ஒடசல் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டல்பட்டி அருகே வந்தபோது சாலையில் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. இதில் தவறி விழுந்த ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக ராஜா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com