மயிலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

மயிலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மயிலம்:

மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் தணிகைவேல்(வயது 31). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தணிகைவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தணிகைவேல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com