ராஜ்ய சபா எம்.பி.யின் மனைவி நான்தான் - 2 பெண்கள் போர்க்கொடி

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி.யின் மனைவி என்று 2 பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகேந்திர பிரசாத்
மகேந்திர பிரசாத்
Published on

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி.யாக தொடர்ந்து 7-வது முறையாக இருப்பவர் மகேந்திர பிரசாத்.

79 வயதாகும் இவர் ‘கிங் மகேந்திரா’ என அழைக்கப்படுகிறார். பீகாரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர் அதிகமான சொத்துக்களை உடையவராகவும், இந்தியாவின் பணக்கார எம்.பி.க்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் மகேந்திர பிரசாத்தால் ‘கைவிடப்பட்ட’ மகன் என்று ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘என் தாய் தான் மகேந்திர பிரசாத்தின் சட்டப்பூர்வமான மனைவி. ஆனால் என் தாயையும், என்னையும் கைவிட்டு விட்டு மற்றொரு பெண்ணுடன் 45 ஆண்டுகளாக என் தந்தை வாழ்ந்து வருகிறார். என் தாயையும், தந்தையையும் சேர்த்து வைக்க வேண்டும்‘ என கூறி இருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இப்போதுள்ள மனைவியை பிரிந்து வாழ மகேந்திர பிரசாத்துக்கு உத்தரவிட்டது.

நான் தான் மகேந்திர பிரசாத்தின் சட்டப்பூர்வமான மனைவி. சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் மகேந்திர பிரசாத்தால் கைவிடப்பட்ட மகன் என்று சொல்லி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 79 வயதான என் கணவரை நான்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார். அவர் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு சட்ட விதிகளை முற்றிலும் மீறி உள்ளது. கணவன்-மனைவியை ஏன் பிரித்து வைக்க வேண்டும்? இந்த நாடு ஜனநாயக நாடு தானா? என கேள்வி எழுப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com