மகாராஷ்டிரா: ஒருதலை காதலில் இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் தனது ஒருதலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த துஷார் கிரண் மாஸ்க்கே(22) தனது வீட்டின் அருகே வசித்த அர்பிதா தாக்ரே என்ற 19 வயது பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை தொடர்ந்து விரட்டிச் சென்று தனது ஆசையை வெளிப்படுத்தியும் அந்தப் பெண் அவரது காதலை நிராகரித்து விட்டார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அர்பிதாவை துஷார் வழிமறித்தார். சற்றும் எதிர்பாராத வகையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

அப்போது அவ்வழியாக வந்த சிலர் கத்திக்குத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்திருந்த அர்பிதாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொலையாளி துஷார் கிரண் மாஸ்க்கே-வை உடனடியாக கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com