மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தனர்.
மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி
Published on

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராம்குமார், முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுடன் (குரோஷியா) நேற்று மோதினார். மணிக்கு அதிகபட்சமாக 223 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய அனுபவம் வாய்ந்த மரின் சிலிச் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ராம்குமாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட்டிடம் (பிரான்ஸ்) போராடி வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com