மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பட்னாவிஸ் மனைவி

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பிரதமர் மோடிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி, அம்ருதா
பிரதமர் மோடி, அம்ருதா
Published on

மும்பை :

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன. இந்தநிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு தெரிவித்த வாழ்த்து செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், “பிறந்தநாள் கொண்டாடும் தேசத் தந்தை நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நாட்டின் நன்மைக்காக இடைவிடாமல் பணியாற்றுகிறார்” என கூறியிருந்தார்.

மகாத்மா காந்தி தேசத் தந்தை என நாட்டு மக்களால் அழைக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியை அம்ருதா தேசத் தந்தை என குறிப்பிட்டதை ஏராளமானோர் கண்டித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com