மோடி மந்திரம் ஜனநாயகத்தையும் காணாமல் செய்து விடுவார் - ராகுல் கிண்டல்

ஒரு விரலின் சொடுக்கில் பலவற்றை தோன்றவும், மறையவும் வைப்பதில் வல்லவரான மோடி நாட்டின் ஜனநாயகத்தையும் இல்லாமல் ஆக்கிவிடுவார் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #MagicianModi #rahulgandhi #democracydisappear
மோடி மந்திரம் ஜனநாயகத்தையும் காணாமல் செய்து விடுவார் - ராகுல் கிண்டல்
Published on

ஷில்லாங்:

60 இடங்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இங்குள்ள ஜோவாய் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வாக்கு சேகரித்து, உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள், அனைத்து மக்களின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் நான்காண்டுகளுக்கு முன்னர் நமது நாட்டு மக்களுக்கு கனவை விற்ற பிரதமர் மோடியின் பேச்சை நம்பிய பலர் மிகுந்த எதிர்பார்ப்பில் மிதந்தனர்.

ஆனால், அவரது ஆட்சியின் இறுதிக்காலம் நெருங்கும் நிலையில் நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, அச்சம், 

வெறுப்புணர்வு, வன்முறை ஆகியவைதான் மேலோங்கி உள்ளன. அவரது வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

ஒரு விரலின் சொடுக்கலில் பலவற்றை மறையவும், தோன்றவும் வைப்பதில் வல்லவர் என்று கருதப்படும் பிரதமர் மோடி பலவற்றை மறையவும், தோன்றவும் வைத்துள்ளார்.

விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி ஆகிய மோசடி பேர்வழிகள் இந்தியாவில் இருந்து திடீரென்று மாயமாகி, இந்திய சட்டத்தின் கரங்களுக்கு எட்டாத வேற்று நாடுகளில் உதயமானதுபோல், மோடியின் மந்திரம் விரைவில் இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தையும் காணாமல் ஆக்கிவிடும்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரின் ஊழலை வைத்து பார்க்கும்போது மோடியின் அரசு ஊழலை தடுக்காததுடன், ஊழலில் பங்கேற்று வருவதும் தெரியவந்துள்ளது. #tamilnews #MagicianModi #rahulgandhi #democracydisappear 

X

Maalai Malar
www.maalaimalar.com