மதுரவாயலில் கொள்ளையர்கள் 2 பேர் கைது

மதுரவாயலில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

மதுரவாயல் கங்கா நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா (33). இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் திருமண  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று இருந்தார்.

பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் 5 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

புகாரின் பேரில் மதுரவாயல் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்தார்.  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்  ஆய்வு செய்யப்பட்டன.

இதில் கொள்ளையில் ஈடுபட்டது வடபழனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ்,  அவனது கூட்டாளி  அய்யப்பந்தாங்கல் துண்டலம் பகுதியைச் சேர்ந்த அருண் என்கிற கில்லி அருண் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த  இருவரையும் நேற்று இரவு மதுரவாயல் போலீ சார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com