மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை

மதுரவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

போரூர்:

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 6-ந் தேதி பிரபுவின் தந்தையின் நினைவு நாள் நிகழ்ச்சி அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் பிரபுவின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் தனது தாயின் 39 பவுன் நகைகளை பிரபு படுக்கை அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விசே‌ஷ நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நகையை எடுக்க பீரோவை திறந்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்று இருப்பது தெரிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com