மதுரவாயல்-ராயபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது

மதுரவாயல்-ராயபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தினர். ஆனால், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களில் 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் ஆலப்பாக்கம் ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்த வெங்கடேசன், போரூர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மீது ஏற்கனவே பெரம்பூர் வில்லிவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராயபுரம், மேற்கு மாதா கோவில் தெரிவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரோஜா என்பவரிடடம் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துசென்றனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் இல்லாததால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், காவலர்கள் விஜயகுமார், செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற காத்து பிரபு, சஞ்சய் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com