பெண் போலீசை டிக்-டாக்கில் கேலி செய்த வாலிபர் கைது

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் டிக் டாக் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாலிபர் எடுத்த டிக்டாக் வீடியோ
வாலிபர் எடுத்த டிக்டாக் வீடியோ
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதி எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர். இங்கு திருச்சி மாவட்டம் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் 2 ஆயுதப்படை பெண் போலீசார் நடந்துசென்றதை ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அதை வடிவேலு காமெடியுடன் இணைத்து டிக்-டாக் செய்து இணையதளத்தில் பதிவிட்டார் .

இதனை பார்த்துஅதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசார் இதுபற்றி லால்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பெண் போலீஸ்சாரை கேலியாக சித்தரித்தவர் மதுரை வாடிப்பட்டி பெரியார்நகர் கச்சைகட்டி பகுதியை சேர்ந்த தம்பிராஜ் மகன் சுபாஷ் கண்ணன் (வயது 19) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞர் மீது 394(டி) பெண்களை அவதூறாக சித்தரித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை பார்வையிட வந்த சுபாஷ்கண்ணன் பெண் போலீசை கேலி செய்து சிக்கியுள்ளான்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com