மதுரையில் வாலிபரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு

வாலிபரை தாக்கி பணம், செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை கத்தி முனையில் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு
Published on

மதுரை:

மதுரை களிமங்கலம் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுபக்கர். இவரது மகன் முகமது அசன் அதில் (வயது 19).

இவர் வண்டியூர் ரிங் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சிலர் கத்தி முனையில் வழிமறித்தனர். அவர்கள் முகமது அசன் அதிலை தாக்கியதோடு மோட்டார் சைக்கிள், ரூ.4 ஆயிரம் செல்போன் மற்றும் கைக் கடிகாரத்தை பறித்துச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது அசன் அதில், அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நரிமேடு சோனையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 64). இவர் நேற்று இரவு நடந்து சென்றார். அப்போது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-யை பறித்துச் சென்றனர்.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ராஜா (22), விக்னேஷ் வரன் (20), விஜய் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com