மதுரை அருகே காய்கறி வியாபாரி வீட்டில் புகுந்து 5 பவுன் நகை-பணம் கொள்ளை

மதுரை அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

மேலூர்:

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை பாரதியார் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 49). இவர் ஒத்தக்கடை மார்க் கெட்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று காலை லட்சுமணன் வழக்கம்போல் மார்க்கெட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு மார்க்கெட்டுக்கு சென்றார்.

இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் துணிச்சலாக லட்சமணனின் வீட்டுக்கதவை திறந்து உள்ளே புகந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.

மாலையில் வீடு திரும்பிய லட்சுமணன் வீட்டில் நகை, பணம் திருட்டுபோயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com