மதுரை எஸ்.எஸ்.காலனியில் பூட்டி இருந்த வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் நகை-லேப்டாப் கொள்ளை

பூட்டியிருந்த வீட்டுக்குள் நகை- லேப்டாப் கொள்ளைபோனது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை
கொள்ளை
Published on

மதுரை:

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது42). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, லேப்-டாப் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிய பேச்சியப்பன் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளைபோய் இருந்தது.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com