மதுரையில் வீடு புகுந்து நகை- ரூ.3 லட்சம் கொள்ளை

வீடு புகுந்து நகை- பணத்தை திருடிய மர்ம நபர்கள் செக் மூலம் ரூ.50 ஆயிரத்தை எடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் வீடு புகுந்து நகை- ரூ.3 லட்சம் கொள்ளை
Published on

மதுரை:

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது51). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கையெழுத்திடப்பட்ட செக் புத்தகத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.

வெளியூரில் இருந்து வீடு திரும்பிய சுப்பிரமணியன் நகை-பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் எடுத்து சென்ற செக் மூலம் ரூ.50 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்திருப்பது சுப்பிரமணியனுக்கு தெரிய வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com